பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஒ ஒளவை சு. துரைசாமி

யார் என்றால், சைவ சமயத்தை மேற்கொண் டொழுகுபவர். சைவக்கொள்கையுடைய அனை வரும் சைவரே யாவர். சைவரென்னும் சொல் சாதி குலம் வேறுபாடின்றி யாவர் யாவர் சைவ சமயக் கொள்கையை மேற்கொண்டு ஒழுகுகின்றார்களோ அவரவர்களுக்கு உரியதாகும். சைவப் பெரியோர்கள் “ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால் மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க” என்றே வற்புறுத்தி யுள்ளார்கள். ஆகவே, சைவருடைய சித்தாந்தம் என்றவுடனே, சைவரென்று கூறிக்கொள்ளும் ஒரு சாதியாருடைய கொள்கையென்று எண்ணுவது குற்றமாகும். இவ்வாறு எண்ணும்படியான நிலைமை யுண்டானதற்குக் காலந்தான் காரணமாகும். காலத்தை நொந்துகொள்வதைத் தவிர அவ்வாறு கூறிக் கொள்பவர்களையோ மற்றவர்களையோ நோவது தவறாகும். அவர்களுக்கு உண்மையை யுள்ளபடி அறிவிப்பது சைவருடைய கடமை. காலமும் கல்வியறிவில்லாமையும் புகுந்து செய்த அட்டுழியத்தால், சைவரிடையே சாதிச் சைவர் களெனவும் உண்மைச் சைவர்களெனவும் பிரிவு உண்டாயிற்று. இப்பிரிவால் உண்டான கேடுகள் பல. சமுதாயத் துறையில் ஒற்றுமைக் குறைவும் அரசியலில் செல்வாக்குக் குறைவும் ஒருபக்கம் தோன்றி வருத்த, பொருளாதாரத் துறையில் ஆண்டுதோறும் சுமார் இரண்டுகோடி ரூபாய் கெடுகிறது. இதனைப் பின்னர் விளக்குவோம்.