பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 333

தமிழ்நாட்டைச் சூழாவண்ணம் பாண்டிமகளாகத் தோன்றி அங்கயற்கண்ணி அரியாசனம் அமர்ந்து, மதுரைப்பதி தழையத் தழையுங்கொடியாய்த் திகழ்ந்தார் என்று குறிப்பிடுகிறார்.

முதுசொற் புலவர் தெளித்த பசுந்தமிழ்

நூல்பாழ் போகாமே முளரிக் கடவுள் படைத்த வசுந்தரை

கீழ்மே லாகாமே அதிரப் பொருது கலிப்பகை ஞன்றமிழ்

நீர்நா டாளாமே அகிலத் துயிர்க ளயர்த்து மறங்கடை

நீணtர் தோயாமே சிதைவுற் றாசிய னற்றரு மங்குடி போய்மாய் வாகாமே செழியர்க் கபயரு மொப்பென நின்றுண

ராதா ரோதாமே மதுரைப் பதிதழை யத்தழை யுங்கொடி

தாலோ தாலோலோ - மலயத் துவசன் வளர்த்த பசுங்கிளி

தாலோ தாலேலோ

கருவிலே திருவருள் வாய்த்த குமரகுருபரர், சமயஞானியாய் - தத்துவஞானியாய்-இலக்கிய ஞானியாய் - முற்றும் துறந்த முனிபுங்கவராய்த் திகழ்ந்து தெய்வத் தமிழ் மணம் கமழும் சைவத் திருக்கொடியைக் காசிமாநகரில் சென்று நாட்டிச் சிவனருள் பரப்பிய பெருமையை என்னென்பது!