பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/338

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ 337

ஏனைத் தானைத் தலைவர்களையும் ஆராய்ந்து இலங்காபுரித் தண்டநாயகன் தலைமையிலேயே பெரும் படையொன்றைச் செலுத்தத் துணிந்து அதற்கு ஆவனவற்றைச் செய்யுமாறு பணித்தான்.

பராக்கிரமன் ஈழவேந்தன் துணை நாடுவதை யும், ஈழவேந்தன் துணை புரிதற்கு உடன்படுவதையும் திருநெல்வேலியிலிருந்த குலசேகரன் தெரிந்து கொண்டான். ஈழப்படை வந்து சேருவதற்கு முன்பே, பெரும்படையொன்று கொண்டு சென்ற மதுரையை முற்றிப் பராக்கிரமன் காவலையழித்தான்; பராக்கிரம னுடைய படை குலசேகரன் படைக்கு ஆற்றாது சிதறிக்கெட்டது. தானைத் தலைவரும் போர் மறவரும் மூலைக்கொருவராய் ஒடிவிட்டனர். பராக்கிரமனும் அப்போரில் குலசேகரனாற் கொலையுண்டான்; அவனுடைய மனைவி மக்களும் குலசேகரன் வாட்கு இரையாயினர். உரிமை மகளிருள் சிலர் உயிர்தப்பி மலைநாட்டிற் புகுந்து மறைந்து வாழ்ந்துவந்தனர். அவரிடையே பராக்கிரம னுடைய புதல்வர்களுள் கடைசி மகனான வீர பாண்டியன் மறைவாக மலைநாட்டில் இருந்து வரலானான். இப்போரின் விளைவாகக் குலசேகரன் எண்ணம் நிறைவேறியது. பாண்டிநாடு இவனது ஒருகுடைக்கீழ் வந்தது. திருநெல்வேலியிலிருந்த குலசேகரன் மதுரை நகர்க்கண் பாண்டியரது அரசுகட்டிலேறி முடிவேந்தனாய் விளங்கலுற்றான்.

த.செ.-22