பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/339

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


338 ஒளவை சு. துரைசாமி

இந்நிலையில் இலங்காபுரித் தண்டநாயன் தலைமையில் புறப்பட்டுவந்த ஈழப்படை இராமேச் சுரக்கரையில் வந்து இறங்கியது. பராக்கிரமன் கொலையுண்டதும் குலசேகரன் மதுரையிலிருந்து அரசியல் நடத்துவதும் கண்ட தண்டநாயகன் மனம் சினத்தியால் வெதும்பிப் புகைந்தது. கண்களில் தீப்பொறிகள் பறந்தன. இராமேச்சுரத்துக் கடற் கரையில் காவல்புரிந்திருந்த குறுநிலத் தலைவனை வெருட்டித் துரத்தினான். அதனைத் தனக்கு அடிப் படுத்திப் பாண்டிக்கரையில் இருந்த குந்திக்குளம் என்ற ஊரையும் கைப்பற்றிக் கொண்டான். குந்திக்குளம் குந்துகளம் என்றும் காணப்படுகிறது. இப்போது அது சமரங்கபுரத்துக்கண்மையில் கும்பிகுளம் என்று பெயர்கொண்டு விளங்குகிறது.

- இலங்காபுரித் தண்டநாயகன் கடற்கரையைச் சார்ந்துள்ள பகுதியைச் சிறிது சிறிதாகக் கைப் பற்றுவதுகண்ட குலசேகரன், சுந்தரபாண்டியன் என்ற தலைவன் ஒருவரோடு படையொன்றை விடுத்து ஈழப்படையை ஈடழிக்க முயன்றான். பாண்டிப் படை வலியிழந்த பறந்தோடிவிட்டது; சுந்தரபாண்டியன் தோல்வியுற்றான். பின்னர்ப் பாண்டியராசன் என்பவர் தலைமையில் ஒரு பெரும் படை சென்றது. அது கண்டதும் தண்டநாயகன் தானை சீறியெழுந்து சினப்போர் புரிந்து பாண்டிய ராசனைப் புறந்தந்தோடச் செய்தது; அப்போரில் குலசேகரனுக்கு நெருங்கிய துணைவனாய் விளங்கிய