பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 33

சைவ சமயக் கொள்கையை மேற்கொண்டு ஒழுகுபவர் சைவரானால், சைவம் என்பது யாது? “சைவம் சிவத்தோடு சம்பந்தமாவது”, என்றார் திருமூலர். சிவம் என்பது எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளுக்குத் தென்னாட்டுத் தமிழர் இட்டு வழங்கிய பெயர். “தென்னாடுடைய சிவனே போற்றி, எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற இத் தொடர்கள் மேற்கூறிய பொருளை வற்புறுத்தி நிற்பதைக் காணலாம். சிவத்துக்கும் உலகத்துக்கும் உள்ள தொடர்பு சைவம், உயிர்களுக்கும் உலகத் துக்கும் உண்டாகும் தொடர்பு சிவத்தால் உண்டாக்கப்படுவது; அதனால் அத் தொடர்பும் சைவமே. இம்மூவகைத் தொடர்புகளையும் எடுத்தோதி மக்களை வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வ வாழ்வு பெறுவிப்பது சைவ சித்தாந்தம் என்பது முதலில் நினைவிற் கொள்ள

வேண்டிய தொன்று.

சிவமென்னும் செம்பொருள் உருவமுடைய

% (l ருlெ(,)

பொருளன்று அருவமும் அன்று: அருவுருவமும் அன்று. அதற்கென ஒரு பெயரும் இல்லை; குணமும் இல்லை. அதற்குத் தோற்றமும் இல்லை; கேடும் இல்லை. கட்டுறுவதும் பின்பு கட்டிலிருந்து நீங்குவ தாகிய வீடுபேறும் அச்சிவத்துக்கு இல்லை. சிவத்தை வி.ப் பெருமை மிக்க பொருளும், நுண்மையான பொருளும் இல்லை; பெருமைக்கும் நுண்மைக்கும் சிவமே எல்லை. பேரறிவு வடிவே சிவம் என்னலாம்.

த.செ.-3