பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/341

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


340 இ. ஒளவை சு. துரைசாமி

சிலர் ஈழப்படையுடன் கலந்து இலங்காபுரித் தண்டநாயகனுக்கே துணைசெய்தனர். முதலில் குலசேகரன் தோற்றான். மதுரைநகர் தண்டநாயகன் கைக்கு வந்தது. அவன் மறச் சான்றோர்களை மலைநாட்டுக்குச் செலுத்திப் பராக்கிரமன் மகன் வீரபாண்டியனைத் தேடிக் கொணர்ந்து அவனையே பாண்டி வேந்தனாக்கினான். -

குலசேகரனோடு நடத்திய போரில் கீழை மங்கலம், மேலைமங்கலம் என்ற சிலவூர்கள் தண்டநாயகன் வசமானபோது அவற்றிற்குக் கண்டதேவமழவராயன் என்பவனைத் தலை வனாக்கினான்; தொண்டி, திருவேகம்பம் முதலிய பகுதிகட்கு மழவ சக்கரவர்த்தி யென்பவனைத் தலைவனாக்கினான். இவ்வாறே புறத்தே பாண்டி நாட்டவர்க்குச் சிறப்புச் செய்யினும் அந்த நாட்டு மக்கட்கு அத் தண்டநாயகன் மிக்க துன்பம் செய்தான். ஊர்களைச் சூறையாடினன்; வயல்களில் தீ வைத்தனன், உயிர்க்கொலை பல புரிந்தனன். இதனால், அத் தலைவர்கள் தண்டநாயகன் காட்டும். அன்பில் ஐயமுற்றனர்; செய்யும் சிறப்பில் நம்பிக்கை இழந்தனர். -

இதுநிற்க, படையிழந்து பரிபவப்பட்டோடிய குலசேகரன் தென்பாண்டி நாட்டுட் புகுந்து பெரும் படை யொன்றைத் திரட்டிக் கொண்டு வந்தான். அவன் வரவுகண்ட மழவராயனும் மழவசக்கரவர்த்தி யும் குலசேகரனோடு கூடிக் கொண்டு மதுரையை