பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/343

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


342 இ ஒளவை சு. துரைசாமி

துணைபுரியுமாறு அனுப்பியிருந்தான். அப்படைக்குத் தலைவனாக எதிரில் சோழச் சம்புவராயன் மகனான திருச்சிற்றம்பலமுடையான் பெருமாள் நம்பிப் பல்லவராயன் என்பான் சென்றான். சோழர் படையின் தென்றிசைச் செலவு கண்டமாத்திரை பாண்டியப் படை உடைந்தோடிற்று, பராக்கிரமன்

மகன் வீரபாண்டியனும் முன்போல் ஓடிவிட்டான்.

சிங்களப்படை சிதறுண்டு போயிற்று. குலசேகரன்

மதுரைக்குரியவனானான். இதனையறிந்த பராக்கிரம பாகு மறுபடியும் இலங்காபுரித் தண்டநாயகனையும் சயதர தண்டநாயகனையும் இருபெரும் படைகட்குத்

தலைவராக்கித் தமிழ் நாட்டிற்குட் செலுத்தினான்.

ஈழப்படையும் குலசேகரன் துTசிப்படையும்,

தொண்டி, பாசிப்பட்டினம் என்ற இடங்களிற்

கைகலந்து பொருதன. அவற்றுள் ஈழப்படையே

வெற்றிபெற்றது. அதனால் அப்பகுதிகளில் வாழ்ந்த

மறவர்களும் பிறரும் ஈழப்படைத் தலைவர்கட்கஞ்சி

அவர்வழி நிற்பாராயினர். அவர்கட்குத் தலைவ

னான மாளவ சக்கரவர்த்தியென்னும் ஒருவனுக்குப் பொன்னும் பொருளும் தந்து தமக்குத் துணையிருக்கு மாறு மனத்தைத் திரித்துக் கொண்டனர். அவரது படையும் வடக்கு நோக்கி முன்னேறுவதாயிற்று.

திருச்சிராப்பள்ளிப் பகுதியைச் சேர்ந்த ஆலம்

பாக்கத்தில் வாழ்ந்த சிவப் பிராமணர் சிலர்

ஈழப்படை வடக்கு நோக்கிவருவது கேட்டஞ்சி

ஊரை விட்டு ஒடத் தலைப்பட்டனர்.