பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 ல் ஒளவை சு. துரைசாமி

திருந்து தம்முடைய சமயப் பணிகளை நன்கணம் ஆற்றுதற் பொருட்டுப் பொன்னும் பொருளும் மிகுதியும் நல்கினான். அவர் செய்யும் வழிபாட்டு முறைகளில் சம்புவராயன் உள்ளத்தில் மிக நம்பிக்கை யிருந்தது. அவர் எண்ணுவது எண்ணியவாறே நிகழுமென எண்ணினான். எத்தகைய அரசியல் நிகழ்ச்சிக்கும் அவருடைய அறவுரையும் அறிவுரை யும் அவனுக்கு வேண்டியிருந்தன. - இந்நிலையில், சோழவேந்தன் பணிமேற் கொண்டு தன் மகன் பல்லவராயன், பாண்டியன் குலசேகரன் பொருட்டுச் சோழர் படைத் தலைவ னாய்ச் சென்றிருப்பதும், போகும் ஈழப்படையை எதிர்த்து நிகழ்வதும், தொடக்கத்தில் பாண்டிப்படை ஈழப்படைக்குத் தோற்றதும் பின்பு கொங்குநாட்டுத் தானை வந்து சோழர் படையுடன்கூடிப் பாண்டிப் படைக்குத் துணையாய்ப் போர்த்தொடுத்திருப்பதும் எதிரிலிசோழன் கேள்வியுற்றான். ஈழப்படைத் தலைவர்கள் தாம்வென்ற பகுதிகளில் மக்களைக் கொன்றும், ஊர்களைத் தீக்கிரையாக்கியும் கோயில் களைச் சூறையாடியும் கொடும்பாடு செய்வது சம்புவராயனுக்குத் தெரிந்தன. ஈழர்கள் செய்யும் கொடுஞ்செயல்களைக் கேட்குந்தோறும் சம்புவ ராயன் உள்ளத்தில் கலக்கம் தோன்றுவதாயிற்று. பாண்டிநாட்டு வடவெல்லைநோக்கி முன்னேறி வரும் ஈழப்படை சோழநாட்டிற்கும் புகுமோ என்றோரெண்ணம் தோன்றி அவன் மனத்தை