பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 347

அலைப்பதாயிற்று. இரவு பகல் கண்ணுறக்கம் இலனானான் எதிரிலிசோழச் சம்புவராயன்.

ஒருநாள் தன் மனக்கவலையை ஞான குருவாகிய ஞான சிவதேவரிடம் தெரிவிக்கக் கருதிப் படைவீட்டினின்றும் புறப்பட்டு எழிற்கோட்டத்து ஆற்பாக்கத்திற்குச் சென்றான். சம்புவராயனது வரவறிந்த ஞானசிவதேவர் அவனை அன்புகளிைய வரவேற்று நல்வாழ்த்து வழங்கினார். வேந்தன் அவருடைய திருவடியில் வீழ்ந்து வணங்கி, அரசியல் உலகில் பாண்டி நாட்டுத் தலைவர்கட்கும் ஈழ நாட்டுத் தலைவர்கட்கும் இடையே போர் நிகழும் செய்திகளை விரிவாக எடுத்து மொழிந்தான்; முடிவில் தன் மனக்கவலையைத் தெரிவித்து, “இது எங்ஙனே யாமோ என்று விசாரம் தோன்றி வருத்துகிற”தென்று முறையிட்டான். - -

அதுகேட்டதும் ஞானசிவதேவர் சம்புவராயன் உள்ளத்தில் நிகழும் அலமரலைப் போக்குவது குறித்து, அவர் பயின்றுள்ள புராண இதிகாசங்களில் கண்ட நிகழ்ச்சிகள் பல எடுத்தோதி ஆறுதல் மொழிந்து, திருவருளியக்கத்தின் சிறப்பையும், அதனையுணர்ந்து அதன்வழி நிற்பார்க்கு “இடும்பையும் இடுக்கணும் பரிவும் துன்பமும் கடும்பகற்பட்ட பணிபோல் மறைந்தொழியும்” என்ற திறத்தையும் சைவாகமங்கள் சைவத் திருமுறைகள் வாயிலாக எடுத்தோதித் தெருட்டினார். அவ்வுரை