பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 ல் ஒளவை சு. துரைசாமி

சிவம் இன்பமேயானது. எங்கும் எப்பொருட்கும் சிவமே முதன்மையும் தலைமையும் உடையது. ஒளிமயமான அருளாற்றலை யுடையது இச்சிவ முதற் பொருள். அவ்வாற்றல் அழிவில்லாதது; ஓங்கியுயர்ந்து எங்கும் நிறைந்திருப்பது சிவமும் அந்த அருளாற்ற லோடு நீங்காமல் கூடியிருப்பதாகும். சிவமாகிய முதற்பொருள் மற்ற உயிர்ப்பொருளையும் உலகப் பொருளையும் நோக்க வேறாக இருப்பினும், அவை களோடு ஒன்றாயும் நோக்க வேறாக இருப்பினும், அவைகளோடு ஒன்றாயும் உடனாயும் விரவி இருப்பது. உயிரும் உலகும் தத்தமக்குரிய தொழிலை ஒழுங்குவழுவாமல் செய்வதற்குச் சிவ முதற் பொருளே காரணமாகும். உயிர்கள் தத்தம் தொழி லாகிய வினைகளைச் செய்து பயன்களை நுகர்ந்து கொண்டே வந்து பக்குவப்படும்போது, சிவமாகிய செம்பொருள் உண்மையறிவு விளங்கச்செய்து வீடுபேற்றினை எய்துவிக்கும். இக்கருத்தையே,

“அருவுருவம் குறிகுணங்கள் முதல்ஈறு

கட்டுவிடு அனைத்தும் இன்றி பெருமையதாய் நுண்ணியதாய்ப் பேருணர்வாய்

ஆனந்தப் பிழம்பாய் எங்கும் ஒருமுதலாய் அழிவின்றி ஒங்கொளியாய்

நிறைந்துளதாய் உயிர்கள் தோறும் விரவிஉடன் தொழிற்படுத்துப் புலம் கொளுத்தி

விடுய்க்கும் பதியாம் எம்மை.”

என்று சிவஞான முனிவர் கூறுகின்றார். -