பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 349

இதற்கிடையே, பாண்டிநாட்டில் சோழ பாண்டியர் படையும் ஈழப்படையும் கடும்போர் புரிந்தன. ஈழப்படைத் தலைவர்கள் தொண்டி, தேனிப்பட்டினம், மானாமதுரை, நெட்டுர், சீவில்லி புத்துர், வேலங்குடி, திருப்புத்துார், விக்கிரமங்கலம் முதலிய இடங்களில் பாண்டிப்படையை வென்றும் வெருட்டியும் மேன்மையுற்றார்கள்: ஆயினும் நாட்டின் பல இடங்களிலும் சோழர் படையால் அலைப்புண்டு திரிந்தமையின் ஈழப்படை நாளடை வில் வலிகுன்றத் தலைப்பட்டது. இடையிடையே இருந்த உள்நாட்டுத் தலைவர்களின் ஆதரவைப் பொருள் கொடுத்து விலைக்கு வாங்கித் திரித்தத னால் ஈழத்தலைவர்பால் பொருட்குறைவும் உண்டாயிற்று. ஈழ நாட்டுமறவர் நாட்டு மக்கள்பால் அன்பின்றித் துன்பமே மிகச் செய்தமையால் மக்கட்கு அவர்கள்பால் வெறுப்பும் பகைமையும் இயல்பாகவே உண்டாய்விட்டன.

ஒற்றர்கள் வாயிலாக ஈழப்படைக் குளதாகிய குறைபாட்டினையுணர்ந்த சோழர் படைத்தலைவர் வேறொரு படையினைத் துணை செய்யவிடுமாறு சோழவேந்தனை வேண்டினர். வேண்டியவாறே பெரும்படையொன்று விரைந்து வந்து சேர்ந்தது. சோழர் பெரும்படை புதிது வந்தணைந்த பெரும் படையுடன் ஈழப்படையை எதிர்நின்று தாக்கி அதனை ஈடழிக்கலுற்றது. மறத்திக் கிளர்ந்தெழப் பொரும் தமிழ்ப் படைமுன் ஈழப்படை எதிர்