பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/353

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


352 ஒளவை சு. துரைசாமி

புன்செய் அகப்பட விளை நிலம் நூற்றறுபத்தேழு வேலியும் எரிகோலும் நத்தமும் குட்டமும் கிணறும் மேனோக்கின மரமும் அகப்பட நாற்பாற்கெல்லை யுட்பட்ட நிலம் வெள்ளவாரிபணைக்கூலி தறிவிறை தட்டார்ப் பாட்டம் அந்தா ராயம் உட்பட ஆயமெல்லாமகப்பட்ட ஏகபோகமாக இறையிலி யாகக் கொடதேசத்துத் தrணராடத்துக் கங்கோஜி சவர்ண கோத்திர மகாமகேஸ்வர ஸ்ருதி ஸ்மிருதி சிந்தே காரநவஸ்யதன் மாஸ்தை உமாபதி தேவரான ஞானசிவ தேவர்க்கு நீர்வார்த்துக் கொடுத்துச் சூரிய சந்திரார்களுள்ள தனையும் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொடுத்தேன் எதிரிலி சோழச் சம்புவராயனேன்,’ என்று கல்வெட்டுமாறு பணித்தான். இஃது ஆற்பாக்கத்துச் சிவன் கோயில் தென்சுவரில் இன்றும் யாவரும் காணக் காட்சி யளித்துக் கொண்டுள்ளது.

  • * *