பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஒளவை சு. துரைசாமி

“எண்ணிலவாய் வகைமூன்றாய் வெண்சிலைபோல்

பற்றியவை தாமாய் என்றும் உண்மையவாய்ச் சத்தசத்தும் பகுத்துணர்

சத்தாய் இருளும் ஒளியு மல்லாக் கண்ணியல்பாய் வசிப்பவரு நிறைவாய் எம்மருளால் கட்டறுத்த வீடு - நண்ணுபவாய் உணர்த்தஉணர் சிற்றறிவிற் பலவாம்நற் பசுக்கள் தன்மை”

என்று வரும் செய்யுளில் காணலாம்.

உயிர்களுக்கும் உலகுக்கும் தொடர்புண்டாவ தற்குக் காரணமாகிய கட்டு (பாசம்) மூவகைப்படும். அவை மலம், மாயை, கன்மம் என்பனவாகும். மலம் என்பது ஒன்றாய் அழிவில்லாத அளவிறந்த உயிர் களையும் அனாதியே பற்றி அவற்றின் அறிவை மறைக்கும் பலவேறு ஆற்றல்களை யுடையதாய் இருப்பது. மேலும் இம்மலத்துக்கும் உயிர்கட்கு முண்டான தொடர்பு செம்புக்கும் களிம்புக்கும் உள்ள தொடர்புபோல, என்று உயிருண்டு அன்றே மலமும் உடனுண்டு என்னும் பழமைத் தொடர் பாகும். இவ்வாறு தொன்மைத் தொடர்புடைய தாயினும் உயிரறிவை மறைத்து இருளாய்த் தோன்றும் இம்மலம். சிவமுதற் பொருளின் அருளொளியால் மறைப்பு நீங்கும் தன்மையுடையது. இவ்வாறு மலத்தால் தோன்றும் அகவிருளை நீக்குதற்கு முதல்வன் திருவருள் துணையாவதுபோல, அத்திருவருளாற்றலால் தோற்றுவிக்கப்படும் உடல்,