பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ( ஒளவை சு. துரைசாமி

இதுகாறும் கூறிய சிவம், உயிர், கட்டு எனப் படும் மூன்றினையும் சிறப்புற அறியும் அறிவு மெய்ஞ்ஞானம் எனப்படும். இம்மூன்றின் இலக்கணத் தையும் பொதுவிலக்கணம் சிறப்பிலக்கணம் என இரண்டாகக் கூறுவர். சிவமுதற் பொருளில் பொது விலக்கணம், சிறப்பிலக்கணம் என்றும், உயிர்ப் பொருளில் பொது விலக்கணம் சிறப்பிலக்கணம் என்றும், பாசப்பொருளில் பொது விலக்கணம் சிறப்பிலக்கணம் என்றும் இலக்கணம் காணப்படும். இவற்றுட் பொது விலக்கணத்தால் அறிவதை விடுத்துச் சிறப்பிலக்கணத்தால் அறிவதைத்தான் மெய்ஞ்ஞானம், உண்மைஞானம், என்று கூறுவர். இந்த ஞானம் பெறற்கரிய பெருஞானமாகும். இந்த ஞானம் வாய்க்கப்பெற்றவர்கள் மலக்கட்டினின்றும் நீங்கிச் சிவானந்தப் பேரின்பத்தை நுகர்வார்கள். அவர்களை இந்நிலையில் விட்டு நீங்கும் மலத்தின் ஆற்றல் அழிவது கிடையாது; இறைவன் அருளாற்ற லில் அழுந்திவிடுமாதலால் மீளவும் வந்து உயிர்களைப் பற்றுவதும் கிடையாது.

இதுவே, “திரிபுண்ர்வு பொதுமாற்றிச் சிறப்பியல்பால்

உணர்ந்தெண்ணித் தெளிந்து தேறும் அரியபெறல். சன்மார்க்க ஞானநிலை

இதுகிடைத்த அறிவால் மிக்கோர் பெரியமலப் பிணியவிழ்த்துச் சிவானந்தப்

பெரும்பேறு மருவிப் பாசம் -