பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ;

இரிவதுTஉம் புகுவது உம் இன்றியொரு

நிலையாம்அவ் வியல்பு தன்னில்

என வருகிறது

இவ்வாறு உண்மைஞான வொழுக்கத்தால் கட்டற்ற உயிர் அறிவு வடிவாய்ச் சிவமுதற் பொருளைச் சேர்ந்து நிற்குங்கால், அறிவானும் அறியப்படு பொருளும் அறியும் அறிவுமாகிய மூன்றாகப் பகுத்தறியவாராமல், அறியப்படும் பொருளேயாய் அதனுள் அழுந்திநிற்கும். நிற்குங்கால் அதன் நிலை கண்ணொளியும் ஞாயிற்றொளியும் போலவும், நீரும் அதன் நிழலும் போலவும், நெருப்பும் அதனொடு கலந்து வெந்து சிவந்து நிற்கும் இரும்பும் போலவும், நீரும் உப்பும் போலவும், ஞாயிற்றொளியும் விண்மீனொளியும் போலவும் ஒன்றாதலும் வேறாதலும் இன்றி ஒன்றி உடனாய் நிற்கும் நிலையாகும். இதனையே அத்துவித நிலை யென்று நம் சைவ சித்தாந்தம் கூறுகிறது. இந்த நிலையினைப் பெற முயலும் அன்பர்கள் உள்ளத்தில் இறைவன் திருக்கோயில் கொள்வான்.

இதனைக் குறிக்கவந்த சிவஞான முனிவர், “உணர்பொருளும் உணர்வானும் உணர்வும் எனும்

பகுப்பொழியா தொழிந்து பானும்

புணர்விழியும் நீர்நிழலும் தீயிரும்பும்.

புனலுவரும் பரிதி மீனும்