பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சைவத்தின் இற்றைநிலை

நம் தமிழ் நாட்டிலும் இதனைச் சூழவுள்ள பிற நாடுகளிலும் இப்போது பல வேறு துறையில் மாறு தல்கள் வேண்டி மக்களிடையே கிளர்ச்சிகள் தோன்றி நிலவுகின்றன. சிறப்பாக, தமிழ் மக்க ளிடையே அரசியல், வாணிபம், பொருளாதாரம், சமுதாயம் முதலிய பலவகைகளிலும் கிளர்ச்சிகள் உண்டாகியிருக்கின்றன. அரசியல் கிளர்ச்சி யாவரும் நன்கறிந்தது. வாணிபத் துறையில் வடநாட்டு முதலாளிகளும் பிறநாட்டவரும் புகுந்து தமிழ் மக்களைச் சுர்ண்டிச் செல்வது கூடாது விற்பனை வகைகளில் மிகுதியான கட்டுத் திட்டம் கூடாது; gil தனித்து வளர வேண்டுமெனக் கிளர்ச்சி/9 யெழுகிறது; பொருளாதாரத் துறையில், நாட்டில் வாழும் மக்களது வருவாய் குறைந்திருப்பதால், வாழ்க்கை முறை தாழ்ந்த நிலையில் உளது: வாழ்க்கை நிலையை யுயர்த்தல் வேண்டும்; அதற் கேற்பப் பொருள் வகைகள் உயர்ந்தோர்க்குப் போல எளியவரும் பெறத்தக்க வசதி யுண்டாதல் வேண்டும்;