பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 43

இவையொருபுறம் நிற்க, சிறுவர் கல்வி பயிலும் கல்வித் துறையிலும் பல மாறுதல்களுக்குரிய கிளர்ச்சிகள் தோன்றியுள்ளன. இளைஞரது கல்வி முறை பல நூல்களையும் படித்து நெட்டுருச் செய்யும் தொழிலாதல் கூடாது; கற்கும் கல்வி ஒருவனைப் பிறர்க்குச் சுமையா யிராது தனித்து வாழும் தகுதி பயப்பதாக இருத்தல் வேண்டும். கற்கும் சிறுவர், வாழ்க்கைக்குரிய பொருள்களைத் தாமே தமித் தெண்ணித் துணியும் மனத்திண்மையுடையவராக, மனப்பயிற்சி பெறுதல் வேண்டும். நலந் தீங்குகளைப் பகுத்தறிந்து செயல் முறையில் கொள்ளுவதும் தள்ளுவதும் செய்தற்குரிய வினைத் திட்பம் மன வளர்ச்சியின் பயனாக வுண்டாவது அதற்கேற்புக் கல்விமுறையமைய வேண்டும் என்பன போலும் உணர்வு காரணமாகக் கிளர்ச்சிகள் எழுந்துள்ளன்.

இங்ஙனம், எல்லாத் துறைகளிலும் மாறுதல் வேண்டிய கிளர்ச்சிகள் மிக்கிருக்க, நம் சமயத் துறையில் ஒரு முயற்சியும் இல்லை யென்றெண்ணு தற்கு இடமில்லை. சென்னையில் உள்ள தென்னிந்திய சைவ சித்தாந்த சமாசம் சமய நூல்கள் பலவற்றையும் பல்லாயிரக் கணக்கில் அச்சிட்டு அடக்க விலைக்கு விற்குமாற்றால் பல்லாயிரக் கணக்கான மக்கள் சமய வுணர்வினராமாறு பெருந் தொண்டு செய்துள்ளது. இந்து அற நிலையப் பாது காப்புச் சட்டத்தின் விளைவாகத் தோன்றிய இந்து அற நிலையப் பாதுகாப்புக் கழகம், சமாசத்தின்