பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 : ஒளவை சு. துரைசாமி

துணைகொண்டு பல கோயில்களிலும் விழாக் காலங்களிலும் பிற காலங்களிலும் சமய வுணர்வு கொளுத்தும் சொற்பொழிவு நிகழ்த்தியும் சொற் பொழிவாளர்களை நிறுவியும் சமய வுணர்வு மக்களிடையே நிலவுமாறு செய்துள்ளது.

ஈண்டுக் கூறிய இந் நிகழ்ச்சிகளிடையே, நாட்டில், பரவிய மேனாட்டுக் கல்வி, அரசிய லுணர்வு, விஞ்ஞான ஆராய்ச்சி, உலகியலறிவு முதலியவற்றின் பெருக்கத்தால், சில இயக்கங்கள் தோன்றி மக்களிடையே அரசியல், சமயம், சமுதாயம் முதலியவற்றின் பெயரால் நிகழ்ந்த தீய கொள்கை, செயல் ஆகிய இத்தீன்மகள்ை எடுத்தோதி மக்களைத் தெருட்ட முற்பட்டன. உயிரொடு அனாதியே கிடக்கும் மலத்தின் கேடு குறித்து, அதன் மறைக்குந் திறங்களை அருட்சத்தி தோய்ந்து வெளிப்படுவது போல, சமய வொழுக்கத்தோடு மணந்து கிடந்த மடம்ையின் தீச் செயல்களை இக்கிளர்ச்சி வேகம் தோய்ந்து வெளிப்படுத்திவிட்டது. -

. இந்நிலையில், சைவர்களாகிய நாம் நம் சைவத்தின் வளர்ச்சி வரலாற்றை யாராய்ந்து, இதன் பயன் மக்கட்கு எய்தா வகையில் தடுத்து நிற்கும் இடையீடுகளையும் இடையூறுகளையும் விலக்கும் கடமையுடையராகின்றோம். தொன்மையவா மெனும் எவையும் நன்றாகா, இன்று தோன்றிய எனுமெவையும் திதாகா என உமாபதி சிவனார் கூறிய உயரிய கருத்தையுட்கொண்டு இக் காலத்