பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 இ ஒளவை சு. துரைசாமி

காணப்படும் இசைப் பாட்டுக்களும், சிலப்பதி காரத்துட் காணப்படும் இசைப் பாட்டுக்கள் பலவும் கடவுள் வழிபாடே பொருளாகக் கொண்டுள்ளன. பின் வந்த சைவத் திருமுறைகளும் இசைப் பாட்டுக் களாகவே யுள்ளன. இவற்றை நோக்குமிடத்துப் பண்டை நாளில் நிலவிய இசைத் தமிழ்ப்பகுதி கடவுட் கொள்கைக்கு ஏற்றதாக அமைந்திருக்கு மென்பது புலப்படும். அப்பகுதி கிடைக்காமையால், அக்காலத் தமிழர் சமயம் இன்னதெனத் தெளிய அறிய இயலாதாகின்றது.

சங்க விலக்கியங்களிற் காணப்படாத சமண் சமயம் சிலப்பதிகாரத்தும், பெளத்தம், சைவம், வைணவம், நியாயம், வைசேடிகம், சாங்கியம், மீமாமிசம் முதலியன மணிமேகலையிலும் காணப் படுகின்றன. மணிமேகலை காலத்துச் சைவ வாதம்,

“இருசுடரோ டியமான னைம் பூதமென்று

எட்டு வகையும் உயிரும் யாக்கையும்

கட்டிநிற் போனும் கலை யுருவினோனும் படைத்து விளையாடும் பண்பினோனும் துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும் தன்னில் வேறு தானொன் றில்லோனும் அன்னோ னிறைவனாகும்.”

  • இக்கருத்துச் சைவத் திருமுறைகளிலே யன்றி, ஆதி சங்கரரெழுதிய தக்கிணாமூர்த்தி துதியிலும் (9) காணப்படுகிறது.