பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 49

என்று கூறுகிறது. இதனால், சிவனே இறைவன்; உயர்வற உயர்ந்த ஒருவன்; நிலம், நீர், காற்று, தீ, விண், ஞாயிறு, திங்கள், உயிர் என்ற எண் வகையும் அமைத்திருப்பவன்; உயிரையும் உடம்பையும் கட்டி நிறுத்துபவன், பல்வகைக் கலைகளும் தன் வடிவாக வுடையவன்; படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐவகைத் தொழிலும் உடையவன்; இத் தொழில்களை விளையாட்டாகச் செய்வது அவற்குப் பண்பு என்பது விளங்கும். மணிமேகலையில், அளவை வாதத்துக்குப் பின் இது கூறப்படுதலால், அவ்வளவைகளும், அவற்றால் அளந்து காணப்படும் தத்துவங்களும் இச் சைவத்துக்கும் உரியவாம் என்பதும் விளங்கும்.

இவ்வாறு மணிமேகலை காலத்தில் சைவ முதலாகப் பல்வகைச் சமயங்களும் நிலவுதற் கிடமாகிய இத் தமிழகத்தில், கி.பி. ஏழாம் நூற் றாண்டின் தொடக்கத்திற்குள், சைவ முதலிய சமயங்கள் ஒளி மழுங்க, சமணமும் பெளத்தமும் மேம்பாடெய்தின. காபாலம், பாசுபதம் முதலிய சமயங்களும் தோன்றியிருந்தவையாயினும், சமண பெளத்தங்களின் முன்னே செல்வாக்கிழந்திருந்தன. விரைவில் சமணமும் பெளத்தத்தை யொடுக்கி நிமிர்ந்து நிற்பதாயிற்று. பாண்டி நாட்டிலும் தொண்டை நாட்டிலும் சமண் சமயமே அரசியல் செல்வாக்கால் சிறப்பு மிகுவதாயிற்று. தொண்டை நாட்டில் மகேந்திரவன்ம பல்லவனும் பாண்டி

த.செ.-4