பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 5

தமிழகத்திற் குடியேறினர். சைவநூற் கொள்கைகளும் கருத்துக்களும் வடமொழியில் இடம்பெற்றன. அந்த வடமொழி யாகமங்கள் சைவக் கோயில்கள் தோறும் சட்டங்களாக அமைந்தன.

இவ்வாறு இரண்டு நூற்றாண்டுகள் கழிந்தன. இக்காலத்தில் தமிழகத்தில் நிலவிமறைந்த பல்வகைச் சமய நற் கருத்துக்களோடியைந்து, சிவபரம் பொருளை முதற்பொருளாகக் கோயில்கட்குச் சென்று வழிபட்டொழுகும் உண்மைச் சைவநெறி உருப்பட்டு வருவதாயிற்று. ஆயினும் கற்றோ ரிடையே, தத்துவங்கள ஆராய்தலும் அவற்றின் வாயிலாக இறைவனை யடைதற்குரிய நெறி காண்டலும் பற்றி பேராராய்ச்சி நிலவத் தொடங் கிற்று. சாங்கியம் யோகம் என்ற சமயக்கலப்பால் யோக முறையும் சைவத்திற் கலந்து மேம்பட்டது. இந்நிலையில் உய்யவந்த தேவநாயனார் முதலிய சான்றோர் தோன்றி, தத்துவ ஆராய்ச்சியும் யோகப் பயிற்சியும் சிவவழிபாடும் வேண்டுவன என வற்புறுத்தினர். தத்துவ ஆராய்ச்சியும், யோக நூலாராய்ச்சியும், பண்டைய வழிபாட்டுச் சிவ நெறியும் கற்றோரிடையே பெருங்கலக்கத்தைச் செய்தன. உய்யவந்த தேவநாயனார், “எத்தனையோ தத்துவங்கள் எவ்வெவர் கோட்பாடுடைய, அத்தனை யும் சென்றங்களவாதே’ என்பனபோன்ற உரை களால், வழிபாட்டு முறையை நிலைநாட்டினர்.