பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


56 இ. ஒளவை சு. துரைசாமி

காட்டிய சைவநெறியில்லை; மெய்கண்டார் சாதனமும் பயனுமாக வகுத்தோதிய சம்யவுணர்வு இல்லை. கோயில்களிலும் மூவர் முதலிகள் அருளிய திருப்பாடல்கள் பூசை செய்வோரால் ஒதப்படுவ தில்லை. பொதுமக்கள் விளங்கிக் கொள்ளத்தக்க மொழியில் பூசனைகளும் நடைபெறுவதில்லை; பொதுமக்கள் பலரும் சென்று அங்குள்ள இறை வனை வழிபடுதற்கு இடமும் தரப்படுவதில்லை. சமய நூல்களைப் படிக்குமிடத்துக் காணப்படும் பொருட்குக் கோயில்களில் சான்றுகளும் இல்லை. சமய வுணர்வு வேறாகவும் கோயிலில் நிகழ்வன வேறாகவும் உள்ளன; சமய நிலையங்களாய கோயில்கட்கும் சமய ஞானம் நல்கும் நூல்கட்கும் தொடர்பில்லாத வகையில் சைவம் நிற்கிறது.

சைவநெறி நிற்பார் மேற் கொண்டொழுகத் தக்க நெறியை மெய்கண்டார் ஒரு வரியில் சிறு சொற்றொடரால் கூறியுள்ளார். அது “தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்’ என்பது. தம்மையுணர்ந்து தம்மை அடிமையாகவுடைய சிவபரம்பொருளை யுணர்தற்கு வேண்டும் அறிவு நிகழ்ச்சிகள் கோயில்களில் காணப்படுவதில்லை. தலைவனாகிய இறைவனை யுணர்ந்தோர், எல்லா மக்களையும் தம்மைப் போலப் பேணி மதிக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். முதல்வன் திருமுன்னாகிலும் யாவரும் ஒரு தன்மையராகப் பேணப்படுவது சைவர்களுக்குத் தலையாய