பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 57

அறமாகும். அவ்வறத்தைக் கொன்று, தாம் வாழ ஏனோர் தமக்கு அடிமையும் கீழோருமாகக் கோயில்களில் மதிக்கப்பட வேண்டுமென்போர் கையில் சைவமும் சைவக் கோயில்களும் தங்கிக் கீழ்மையுறுவது சைவத்தின் இற்றை நிலையாக வுளது. காணார்க்கும் கேளார்க்கும் மெய்யால் உழைக்கும் திறமிழந்தார்க்கும் சமய வுணர்வு கொளுத்தலும் உணவும் உடையும் மருந்தும் கொடுத்துதவு முகத்தால், உடம்பு தாங்கி, பதி புண்ணியம் புரிந்து உய்தி பெறச் செய்தற்கென விரிவாக அமைக்கப்பெற்ற கோயில்கள் அத் துறையில் பயன்படா தொழிவது சைவத்தின் இற்றை நிலையாகவுளது.

இவ்வாறே, சமய நூல்களும் கூறும் வகையில் உண்மைச் சைவராயினார் செய்தற்குரிய நற் செயல்கள் பலவும் சைவர்கள் கோயிலில் நடைபெற வேண்டியிருக்க, அவை நடைபெறாதிருப்பது இற்றை நிலையாக வுளது.

“ஞாலம் நின்புகழே மிக வேண்டுந்தென்

னாலவாயி லுறையு மெம்மாதியே.”

அனைத்திந்திய வரலாற்றுக் காங்கிரசில் நிகழ்த்திய ஆங்கிலச் சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு (1943)