பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ஒளவை சு. துரைசாமி

2. இந்நகர்க்குத் தெற்கில் திருக்கழிப்பாலை என்ற திருவுடைய ஊர் தோன்றுகிறது. அதன் அருகே கடல் தரும் காட்சி இறைவன் பெருமையை நினை வுறுத்துகிறது.

நடம் நண்ணியோர் நாகம் அசைத்தவனே

விடம் நண்ணிய துமிடறா விகிர்தா

கடல் நண்ணு கழிப்பதி காவலனே

உடல் நண்ணி வணங்குவன் உன்னபடியே

கடல்துறையில் கலங்கள் வந்து தங்கி வாணிகம் புரிகின்றன. அக்காட்சி காண்பார் மனக்கவலையை மாற்றி இன்பம் கிளர்விக்கிறது. அதனை நினைந் தருளும் ஞானசம்பந்தர்,

“கலங்கள் வந்துலவும் கழிப்பாலையை

வலங்கொள்வார் வினையாயினமாயுமே”

என்று இசைக்கின்றார்.

3. கொள்ளிடத்தின் தென்கரையில் கடல் அலைகள் கொணர்ந்த நுண்ணிய வெண்மணலைக் கடற்காற்று நன்கு பரப்பி அழகு செய்திருக்கும் காட்சி ஞானசம்பந்தரின் கருத்தைக் கவர்கிறது. முத்துக்கள் மணலிடத்தே ஒதுங்கிக்கிடக்கின்றன. நிழல் தழுவிய மணற்பரப்பில் விளையாட்டயரும் இளம் பெண்கள் தங்கள் பாவைக்குத் திருமணம் செய்து மகிழ்கின்றார்கள். அது காணும் ஞான சம்பந்தர் இது நல்லூர்ப் பெருமணம்; இங்கே எங்கள் பெருமான் பெண்ணொடு பாகனாய் வீற்றிருக்