பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 63

கின்றான். அதனால் இவ்வூர்க்கண் திருமணக்காட்சி சிறந்து தோன்றுகிறது போலும் என்ற பொருள் விளங்க, -

தருமணல் ஒதம் சேர்

தண்கடல் நித்திலம் பருமணலாக் கொண்டு

பாவை நல்லார்கள் வருமணம் கூட்டி

மணம் செயும் நல்லூர்ப் பெருமணத்தான் பெண்ணோர்

பாகம் கொண்டானே

என்று பாடியருளுகின்றார்.

இங்ஙனம் இல்லிருந்து நல்லறம் புரிதற்கு ஒத்த நிகழ்ச்சி மல்கிய இப்பகுதி, ஒழுக்கத்து நீத்த உரவோர்க்கும் உரிய இடம் என்ற கருத்தைப் புலப்படுத்துகிறார்.

மேகத்த கண்டன் எண்தோளன்

வெண்ணிற்று உமை பாகத்தன் பாய்புலித் தோலொடு

பந்தித்த நாகத்தன் நல்லுர்ப் பெருமணத்தான்

நல்ல போகத்தன் யோகத்தையே

புரிந்தானே

என்று பாடுகிறார்.