பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஆ ஒளவை சு. துரைசாமி

இவ்வாறு தெருவில் தெரிகின்றன என்று காண் கின்றார்.

“உருவத்தில் மிக்க ஒளிர்சங்கோடிப்பி

அவை ஒதம் ஒதவெருவித் தெருவத்தில் வந்து செழுமுத்தலைக்கொள்

திருமுல்லை வாயிலதுவே”

என்று உரைக்கின்றார்.

ஒருபால் காவிரி கொணர்ந்த சந்தனமும் அகிலும் சிறக்க, கடல் அலைபோந்து மனையவர் சிந்தும் தேறலை உண்டு தேக்கெறிகிறது. இதனை,

வரைவந்த சந்தோடகிலுந்திவந்து

மிளிர்கின்ற பொன்னிவடபால் திரைவந்து வந்து செறிதேறலாடு

திருமுல்லைவாயிலிதுவே

என்று தேன் சொட்டப் பாடுகின்றார்.

6. இவ்வூர்க்கருகே கலிக்காமூர் காட்சி தருகிறது. (அன்னப்பன் பேட்டை) நெய்தற்கரிய சங்கு இப்பி ஆகியவற்றுடன்

“துறைவளர் கேதகைமீது

வாசம் சூழ்வான் மலிதென்றல் கறைவளரும் கடலோதம் என்றும்

கலிக்கும் கலிக்காமூர்”

என்ற திருப்பாட்டால் கலிக்காமூர் என்ற பெயர்க்குக் காரணம் காட்டுகின்றார்.