பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் 67

7. காவிரியாறு கடலொடு கலக்கும் துறையில் இருப்பது சாய்க்காடு, பைஞ்சாய்க் கோரை காடு போல் வளருமிடம்; இதன் கருத்தறியாமல் கைதை சோறாயினும் கைந்நிறைய வேண்டும் என்ற பேராசைப் பேய் போல எதுவாயினும் வட மொழியில் மாற்றவேண்டும் என்ற கூட்டம் இதனைச் சாயாவனம் என்று மாற்றி விட்டது. சாய்கிற பக்கமே சாயும் தன்மையால் தமிழர்களும் அதனைச் சாயாவனம் என்றே சொல்லி வாழ்கின்றார்கள்.

இச்சாய்க்காடு காவிரிப்பூம்பட்டினத்தின் ஒருபகுதி, அதற்குப் பூம்புகார் என்றும் பெயருண்டு. இவ்விரண்டையும் ஞானசம்பந்தர் மிக்க ஆர்வமும் “காவிரிப்பூம்பட்டினத்துச் சாய்க்காட்டு எம்பர மேட்டி” என்றும், “தண்புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன்” என்றும் எடுத்துரைக்கின்றார்.

காவிரியும் கடலும் கூடும் காட்சியை,

“மத்தயானையின் கோடும் வண்பீலியும் வாரித் தத்துநீர்ப் பொன்னி

சாகரம் மேவும் சாய்க்காடே”

என்பர்.

சாய்க்காட்டுக் கானற் பொழிலைக் காண்கின்ற சம்பந்தப் பெருமான் பூக்கள் நல்கும் தேனுண்டு மகிழும் வண்டுகளின் விளையாட்டை நோக்குகிறார். தன் காதல் வண்டு புன்னையங் கானலுக்குச் சென்று