பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஒளவை சு. துரைசாமி

மலர்த் தேனுண்டு தாது அளைந்து வருகிறது. அதன் பெடை வண்டு அது பொறுக்காமல் பொழிலகம் புகுந்து மறைகின்றது. காதல்வண்டு அதைத் தேடி அடைகிறது. பெடை வண்டு ஊடிப்பிணங்குகிறது. இதனை,

“மாதர் வண்டு தன்காதல் வண்டு

ஆடிய புன்னைத்

தாதுகண்டு பொழில்மறைந்து ஊடுசாய்க் காடே”

எனப் புகல்கின்றார்.

ஒரு பக்கம் செருந்தியும் கோங்கும் மலர்ந்த கழிக்கரையில் தாழையரும்பி மலர்கிறது. செருந்தியும் கோங்கும் பொன்தட்டுப் போல் விரிந்து நிற்க அதன்கண் தாழம்பூவின் தாது உதிர்ந்து திருநீறு பாந்த பொற்றட்டுப் போலத் தோன்றுகிறது; அதனைக்

கட்டலர்த்த மலர்தூவிக்

கைதொழுமின் பொன்னியன்ற தட்டலர்த்த பூஞ்செருந்தி

கோங்கமரும் தாழ்பொழில்வாய் மொட்டலர்த்த தடந்தாழை

முருகுயிர்க்கும் காவிரிப்பூம் பட்டினத்துச் சாய்க்காட்டெம்

பரமேட்டி பாதமே

என்று பாடுகின்றார்.