பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

சீர்காழி ஊர்ப்பெயர் குறித்தும், ‘பைஞ்சாய்க் கோரை காடுபோல் வளருமிடம் சாய்க்காடு” (67) என்று அவ்வூர்ப் பெயர் குறித்தும் ஆசிரியர் தெளிவுறுத்துகிறார். மேலும், “இதன் கருத்தறியாமல் கைதை சோறாயினும் கைந்நிறைய வேண்டும் என்ற பேராசைப் பேய் போல எதுவாயினும் வட மொழியில் மாறவேண்டும் என்ற கூட்டம் இதனைச் சாயாவனம் என்று மாற்றிவிட்டது. சாய்கிற பக்கமே சாயும் தன்மையால் தமிழர்களும் அதனைச் சாயாவனம் என்றே சொல்லி வாழ்கின்றார்கள்” (67) என்று வடமொழி வெறியரைக் கடிந்துரைக்கிறார் உரைவேந்தர். -

சிந்தையுள் சிவனைக் கண்ட அப்பரடிகள் அந்த அருட்காட்சியை விளக்குமாற்றைக் கண்டவர் விண்டது என்னும் கட்டுரையால் அறியலாம். அரியானை முதலான திருப்பதிகங்களுக்கு விளக்கம் தருவது தில்லையில் நாவரசர் என்னும் கட்டுரை. தில்லையில் சுந்தரர் என்னும் கட்டுரையில் உரைவேந்தர் சேக்கிழாரின் ‘ஐந்து பேரறிவும்” என்னும் அரிய பாடலுக்குச் சிறந்த விளக்கவுரை தந்துள்ளார். - - -

‘கயிலையும் அரசும் கட்டுரையில் திருக் கயிலாயத் திருத்தாண்டக விளக்கமும், நம்பி யாண்டார் நம்பி கட்டுரையில் திருச்செங்காட்டாங் குடித் திருப்பதிக விளக்கமும், வினையுணர்வும் கட்டுரையில் மடையில் வாளை பாய’ என்னும்