பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 ல் ஒளவை சு. துரைசாமி

படையார் புரிசைப்பட்டினம்சேர்

- * +1 பல்லவனிச்சரமே

என்று பாடுகிறார்.

பழங்குடிமக்கள் இருந்து வாழும் இயல்பைக் காண்டவர்,

“மண்ணார் சோலைக் கோலவண்டு

வைகலும் தேன் அருந்திப் பண்ணார் செய்யும் பட்டினத்தப்

பல்லவனிச்சரமே

9. அதற்கு மேற்பால் உள்ளது வெண்காடு. வெள்ளையானை வழிபட்டதனால் இவ்வூர் வெண்நாடு என ஊரவர் உரைக்கின்றார்கள். இளங்கோ கூறும் சோம சூரிய குண்டங்கள் இங்கே முக்குளமாய் விளங்குகின்றன.

“அயிராவதம் பணிய

மிக்கதனுக்கருள் சுரக்கும் வெண்காடும் வினைதூக்கும் முக்குளம் நன்குடையானும்

முக்கணுடை இறையவனே.”

இங்குள்ள கழிகளும் பொழில்களும் ஞானம் பெற்ற பெருமானுக்கு நல்ல காட்சி தந்து இன்புறுத்து கின்றன:

கழிநீரில் தோன்றிய தாழைப்பூவின் நிழலை நீர்க்குருகென்று கெண்டை மீன் கண்டுமருண்டு தாமரைப் பூவின் அடியில் மறைகிறது; அதனை