பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் 73

கொண்ட, சான்றோர்களில் உள்ளுறை காணும் கூர்த்த மதி நுட்பம் இன்றிச் சவலைகளாய்ச் சமழ் கின்றார்கள். பரந்துபட்டுப் பலவாய்த் தோன்றும் இயற்கை நிகழ்ச்சிகளில் சிலவரைந்து கொண்டு கூறுவதன் குறிப்பு யாது என்று நோக்குவது புலமை GFfrG 6G5@frGUT GE (Scientific method) 6TGrlig. பொறி புலன்களாற் கண்டதைச் சொல்லுருக் கொடுத்துரைப்பது உண்மைப் புலமை கலந்த பாவன்மையாகாது, சொல்லார வாரமாய்ப் பயனில

மொழிதலாகும்.

நுண்ணறிவு கொண்டு நோக்குவோர்க்கு இனிய தொருபயன் தந்து மகிழ்விக்க வேண்டும் என்பது தமிழ்ச் சான்றோர் கொள்கை. இம்மரபு பற்றியே வைணவப் பிரபந்தங்களுக்கு உரை கண்ட சான்றோர் உள்ளுறை என்ற சுவோபதேசம் கண்டு உரைத்துள்ளனர்.

அந்த நெறியில் நின்று ஆயுமிடத்துச் சீர்காழி யில் காட்டிய காட்சிகள் ஞானப் பொருளை உள்ளீடாகக் கொண்டிருப்பதை உணரலாம்.

வாழைத் தோட்டத்திற்குட் புகுந்து மந்தி உயரத்தில் வாழைப்பழம் கனிந்து விளங்குதல் கண்டு தானொரு வாழை மடல் மேல் இருந்து தாவிப்பற்ற நினைந்து இருகாலில் நின்றது; அதன் கனம் பொருமடல் கீழ்நோக்கித் தாழவே மாட்டாமல் கனி பெறற்கின்றி நீங்குகிறது.