பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 75

பெருக்கில் சாய்ந்து மூழ்குவதறிந்த இளம்வாளை மேனோக்கித் துள்ளுவதாயிற்று என்ற பொருள்பட,

“தண்ணார் நறுங்கமலம்மலர்

சாயவ்விளைவாளை விண்ணார் குதி கொள்ளும் வியன்

வேணுபுரம் அதுவே”

என்று பாடியருள்கின்றார்.

இவ்வாற்றால் ஞானசம்பந்தர் காட்டும்

இயற்கைக் காட்சிகள் இனிய சொல்லோவியமாக வொழியாது ஞான நிலையமாகவும் அமைந்திருப்பது அறிந்து இன்புறற் பாலது.