பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5

கண்டவர் விண்டது

“கண்ட மும் விண்டதில்லை; விண்டாரும் கண்டதில்லை’ என்பது நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில் காணப்படுவது. இதன்கண் முன்னடி யினும் பின்னடியைத் திருவாசகத்தில்” கீதங்கள் பாடுதல் ஆடுதல்லால் கேட்டறியோம். உனைக் கண்டறிவாரை’ என வரும் தொடர் உறுதிப் படுத்துகிறது. கண்டவர் விண்டிலர் என்ற கருத்து ஒரு கால் என் மனத்தை இயக்கிற்று. சமய குரவர் பலரும் இறைவனைக் கண்டவர்களாயிற்றே என்ற எண்ணம் எழுந்தது. “கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறி யாதன கண்டேன்” எனத் திருநாவுக்கரசர் அருளிய திருமொழி நினைவுக்கு வரவும், அவர் கண்ட திறம்காண முயன்றேன். அம் முயற்சியின் விளைவு இக்கட்டுரை.

நாவுக்கரசர் வரலாறு நாடு நன்கறிந்தது. நாவுக்கரசர் என்ற பெயர், அவரது இயற் பெயரன்று. அவருக்குப் .ெ ர் மருள் நீக்கியென்று சேக்கிழார் கூறுகின்றார், “உலகில் வரும் இருள் நீக்கி ஒளி