பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ல் ஒளவை சு. துரைசாமி

கெட்ட குடியே கெடும்’ என்பது போலக் கலிப்பகையார் “போர்க்களத்து உயிர் கொடுத்து” மறைந்தது திலகவதியாரின் வாழ்வொளியை மறைத்தது; மருள் நீக்கியார்க்கு உண்டாகிய மருள் பெரிதாயிற்று. ‘தம்பியார் உளாாக வேண்டுமென” திலகவதியார் மனத்துள் “வைத்தயா’ அவரை உயிர் வாழச் செய்தது; இல்லை யாயின் மருள் நீக்கியார் தாமும் அது நீங்காது சைவவுலகிலும் அதனை நீக்காது போயிருப்பர்.

இதனால் அவர் மருள் நீங்கினார் என்று கூறிவிடலாகாது, தமக்கையார் அவர்க்குத் தாயினும் பரிந்து சான்றோனாக்கும் பணியில் தந்தையினும் சிறந்து விளங்கினாராகவும், சமய நூற்பயிற்சியில் தலைப்பட்ட மருள் நீங்காது வேற்றுச் சமய மருட்சியில் மூழ்கினார். சேக்கிழாரும், “சமயங்களான வற்றின் நல்லாறு தெரிந்துணர்ந்தும்” மருள் நீங்கும் “திறமிலரானார் என்றும், அதற்குக் காரணம் நம்பரது அருளில்லாமை என்பது விளங்க “நம்பர் அருளாமை யினால் வேற்றுச் சமயம் குறுகினார் என்றும் கூறுகின்றார்.

மருளுடையார் பொருளல்லவற்றுள் மூழ்கித் திளைக்குங்கால் அது பொருளெனக் கருதித் தம் கண்ணையும் கருத்தையும் செலுத்துவது போல, மருணிக்கியாரும் சமண் சமயத்தைச் சார்ந்து அதுவே பரமெனக் கருதிப் புலமைமிகுந்து, அவர் சமண் தருமம் பரப்பும் தானைக்குத் தலைவராகித்