பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7

பதிகத்தின் விளக்கமும் இடம்பெற்றுள்ளன; அனைத் தும் கருத்துக்கு விருந்தளிப்பனவாம். திருஞான சம்பந்தர் பாடியுள்ள 4200 திருப்பாட்டுகளுள் 3600 திருப்பாடல்களில் வினையுணர்வு பயின்று வருவ தாக உரைவேந்தர் குறிப்பிடுவது அவர்தம் நுட்ப ஆய்வறிவினைச் சுட்டுகிறது. - -

‘வாழ்க அந்தணர் என்னும் ஞானசம்பந்தப் பெருமான் பாடலுக்குச் சேக்கிழாரடிகள் ஐந்து பாடல்களில் பேருரை வழங்கியுள்ளார். அதன் அரிய விளக்கமாக அமைந்தது பன்னிரண்டாம் கட்டுரை. ‘எல்லாம் என்பதற்குச் சேக்கிழார் வேறெல்லாம் என்று உரை வரைய, நம் உரைவேந்தர் வேறு’ என்னும் சொல்லைச் சேர்த்ததற்கான காரணத்தை விளக்குகிறார். அப்பூதியடிகளார் புராணத்தில் சேக்கிழார் வேறொரு பேர் என்பதற்குத் தந்த விளக்கத்தை எடுத்துக்காட்டுவது ஒளவை அவர் களின் நுண்மாண் நுழைபுலத்திற்குச் சிறந்த சான் றாகும்.

நூற் கட்டுரைகள் அனைத்தும் தமிழன்பர் களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் தேன் துளிகள் ஆகும்; படிக்கப் படிக்கத் தெவிட்டாதவை; நினைக்க நினைக்க மகிழ்ச்சி தருபவை.

ஒரு நூற்றாண்டு கண்ட ஒளவையின் உள்ளத்தைப் படம்பிடித்துக்காட்டும் ஒர் அரிய கருவூலம் தமிழ்ச் செல்வம் என்னும் இந்நூல். வாழ்க ஒளவையின் புகழ்! - - -

- இரா. குமரவேலன்