பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஒளவை சு. துரைசாமி

தமது முதிய தோளில் தாங்கி வந்தார். அதனை யறியாத ஞானசம்பந்தர், நாவுக்கரசரைக் காண விழைந்து “அப்பர் எங்குற்றார்” எனக் கூட்டத்து மேலோரை வினவினார். அது கேட்டதும் நாவுக்கரசர் நம்மைத்தான் கேட்கின்றார் சம்பந்தர் எனவுணர்ந்து, “இங்கு உற்றேன்” என்பவர், அன்பால் மனம் உருகி, “உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெரு வாழ்வு வந்தெய்தப் பெற்று இங்கு உற்றேன்” என்றார். இங்ஙனம் ஞானசம்பந்தரால் அப்பர் என்ற இன்சொல் பொதுவாகத் தந்தைக்குரிய முறைப் பெயராயினும், தந்தை நிலையில் வைத்துப் போற்றற்குரியவரை, அப்பர் என்றும் அப்பா என்று வழங்கும் இயல்பினால், இங்கே நாவுக்கரசர் “அப்பர்” எனப்படுகின்றார்.

இந்நிலையில் சிவபரம் பொருளையும் தந்தை, எந்தை என்பது போல அப்பன், என்ற உரைப்ப துண்டு. திருநாவுக்கரசரும் சிவனை, “ஆதிரை நாளா அமர்ந்தார் போலும் ஆக் கூரில் தான் தோன்றி அப்பனாரே” எனவும், “அப்பனி அம்மை நீ ஐயனும் நீ எனவும் “அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன்’ ‘அந்தணனை அரநெறியில் அப்பன் தன்னை” எனவும் பல பாட்டுக்களில் பாராட்டுவர். அது. கண்டவர் சிலர், சிவபெருமானை அப்பர் என்று: பாடியதனால் நாவுக்கரசர்க்கு அப்பர் என்பது பெயராயிற்றெனச் சொல்லுகின்றனர். நாவுக்கரசரே யன்றி, ஞானசம்பந்தரும் நம்பியாரூரரும் மணி