பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் - 83

விஞ்ஞான நெறியில் நுண்பொருள் காண விழைவார்க்கு அந்நெறிக்குரிய அறிவு வேண்டும்; மருத்துவ நெறியின் முயல்வார்க்கு மருத்துவ வறிவு முற்பட வேண்டும். பொறியில் அறிவுடையார்க்கே பொறியியல் துறையின் நுண்மை தேர்ந்து புதுமை காண முடியும். அவ்வாறே, சிவத்தைக் காண்டதற்குச் சிவஞானம் வேண்டப்படுகிறது. சிவஞானமுடை யார்க்குச் சிவம் பெறுதல் கூடும்.

இதுபற்றி ஆராய்ந்து சிவஞானம் கைவரப் பெற்ற மெய்கண்டதேவர், சிவபரம்பொருள் நமது இயற்கையால் அறியப்படுவதன்று; அறியப்படாமை யால் இப்பொருள் என்று சொல்ல முடியாது; சிவஞானத்தால் உணர்வார்க்குத் தெற்றென விளங்கும் செம்பொருள், சிவசத்தாம் என்பது விளங்க, “உணர்உரு அசத்து எனின், உணராது இன்மையின், இருதிறனல்லது சிவ சித்தாம்” என்று கூறுகின்றார். -

சிவஞானம் பெறுவது எங்ஙனம் எனின், சிவநெறிக்கண் முயல்வது. அறிவுத் துறையில் முயலும் மாணவர்க்கு அந்நெறியில் மயக்கமுண்டாகுங்கால் ஆசிரியன் வந்து அதனை நீக்கி உரிய நெறியை அறிவுறுத்துவதை நாம் காண்கின்றோம். அவ்வாறே சிவநெறிக்கண் முயலுங்கால் தோன்றும் அறியா மையைப் போக்கிச் சிவஞானத்தை அருளுவன். சிவநெறிக்கண் முயலும் நெறியும் அதன்கண் சிவபரம்