பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 85

தாண்டகத்தில் தன்னையும் தன் திறத்தறியாப் பொறியிலேனைத் தம் திறமும் அறிவித்து நெறியும் காட்டி, அன்னையையும் அத்தனையும் போல அன்பாய், அடைந்தேனைத் தொடர்ந்து என்னை ஆளாகக் கொண்ட தென் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன். யானே’ (305.) என்று விளக்குகின்றார்.

இவ்வண்ணம் தன்னையும் தன் திறத்தையும் அறிவித்து, அதற்குரிய நெறியையும் காட்டிய பொழுது அந்நெறியைக் கடைப்பிடித்துச் செல்லும் தமக்கு இறைவன் காட்சியருளிய திறத்தை நாவுக் கரசர் நமக்கு அறிவிக்கின்றார். நூல்கள் “அந்நிய மின்மையின் அரன் கழல் செலும்” என்றம், “அயரா அன்பின் அரன் கழல் செலும்” என்றும் கூறுகின்றன; ஆயினும் உலகில் வேந்தன் அருளினாலன்றி அவன் திருமுன் செல்ல ஏனோர்க்கு முடியாது; உலகியல் தலைவரும் அப்பெற்றியரே. அவ்வாறே இறைவனைக் காண்டற்கும் அவன் திருவருள் வேண்டும். அது பற்றியே நாவுக்கரசர், ‘அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால், இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொனாது” என்று கூறுகின்றார்.

இயல்பிலே காணலாகாத நுண்ணிய பொருள் களைக் காண்டற்கெனக் கருவிகள் அமைதல் போல இறைவனைக் காண்டற்கு அவன் திருவருள் கருவி