பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ஒளவை சு. துரைசாமி

யாகும். ஆனால் அக்கருவிகட்கு அடிப்படை அறிவு ஆவது போலத் திருவருளும் அறிவு வடிவாய்க் காண்பார். அறிவிற் கலந்து அவனைக் காணச் செய்வததான் இங்கே திருவருளே கண்ணாகக் காண்பது என்று கூறப்படுகிறது.

வேந்தனருளோ, தலைவனதருளோ அவனைச் சூழவுள்ளோரது துணையால் பெறப்படுகிறது; இறைவன் திருவருள் எவ்வாறு எய்தும்; அவன் உலகியல் தலைவர் போல அன்றி, “இருநிலனாய்த் தீயாகி நீருமாகி, இயமானனாய் எறியும் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தியாய்” இருத்தலின் “அவனது அருள் பெறுமாறு யாங்ஙனம் எனின், அவன் இருநிலனு மாவன்; அல்லனுமாவன்; உயிர்கட்கு அருளல் வேண்டியே இவ்வாறு நிலமுதலியனவாகவும் அல்ல னாகவும் உள்ளான். உமை கேள்வனான திருவுருவும் நமக்கு அருள்வது குறித்ததே என்பார். “விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேதவிதியல்லர் விண்ணும் நிலனும் திரிதருவாயுவல்லர் செறுதியு மல்லர் தெளிநீருமல்லர் தெரியில் அரிதரு கண்ணி யானை ஒருபாகமாக அருள் காரணத்தின் வருவார்” (82) என்று அறிவிக்கின்றார்.

இவ்வாறு அருளுதல் காரணமாக எழுந்தருளும் இறைவன், நமக்கு அருளும் செயல் மிக்க வியப்பாக உளது. உயிரறிவு அது நின்ற உடம்பின் அமைப்புக்கு ஏற்ப விளக்கமுறுகிறது; அதுபற்றியே திருமூலர்,