பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் ஆ 89

மானதம் என்றும் கனவு என்றும் இரு வகைப்படும். இவற்றை முறையே பொறி புலன்களால் புறத்தே உலகப் பொருள்களை அறிவது வாயிற்காட்சி; பொறிகளை விடுத்து அளவு காட்டியவற்றை மனத்தால் காண்பது கனவுக் காட்சி; மனத்தின் நடுக்கூறாகிய சித்தத்துள் சிந்தித்துணர்வது மானதக் காட்சி. இவை நிகழும் போது உயிருணர்வு முறையே புருவ நடுவிலும், கழுத்திலும் மார்பிலும் இவற்றின் மனத்தால் எண்ணியவற்றையே கனவின் கண் கண்டு உண்மை மெய்ப்படுமிடத்தும் கனவு, பொறிகளாற் கண்டனவும் மனத்தால் எண்ணினவும் தன் முன் மயங்கி வேறு வேறு தோற்றங்களாய்ப் பொய்ப் படுமிடத்தும் கனவேயாகும்.

இவற்றின் வேறாகத் தன் வேதனைக் காட்சி, யோகக் காட்சி என இரண்டு கூறுவர். அக்காட்சிகள் தவறான மனவெல்லைக்கு அப்பாற்படுதலால் அவை சொல்லுக்கு அகப்படுவதில்லை; இன்பம் துன்பம் என்பன உண்மையுணர்வேயாயினும் அவை உணர்வாய் ஒழிகின்றனவேயன்றி உரைப்பதற்கு அகப்படுவதில்லையன்றோ!

அதனால், கண் முதலிய பொறிகளாற் காணும் வாயிற் காட்சி, கனவுக் காட்சி, சிந்தைக் கண் வைத்துக் காணும் மானதக் காட்சி என்ற மூன்றாலும் சிவ பரம்பொருளைத் தாம் கண்ட இயல்பை நாவுக்கரசர் “பாவுற்றசிலர் செந்தமிழ் இன் சொல்” வளப்பதிகங்களில் பகர்கின்றார்.