பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ 91

சில திருப்பதிகட்குச் சென்று வழிபடுகையின் அவ்வாராமை தீரக் காண்கின்றார்.

கஞ்சனூர் சென்று கண்ணுதற் கடவுளைக் கண்டு பரவுகின்றார். அக்காட்சியால் அவரது ஆர்வம் நிறைகிறது. அதனால், “உருத்திரனை உமாபதியை உலகானானை உத்தமனை நித்திலத்தை ஒருவர் தன்னைப் பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பினானைப் பசும் இரவாய் நீர் வெளியாய்ப் பரந்து நின்ற, நெருப்புதனை நித்திலத்தின் தொத் தொப்பானை நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைச், கருத்தவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உயர்ந்தேனே’ என்று பாடி மகிழ்கின்றார்.

கழுக்குன்றத்தில் பெற்ற சிவக் காட்சியை ‘மூவிலை வேற்கையானை மூர்த்தி தன்னை முது பிணக்காடு உடையானை முதலானானை ஆவினில் ஐந்து கந்தானை அமரர் கோனை ஆலாலமும் உண்டுகந்த ஐயன் தன்னைப், பூவினில் மேல் நான்முகனும் மாலும் போற்றப் புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக் காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே’ என்றும், கற்குடியில் பெற்ற காட்சியை,

‘பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப் பிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வானில் விண்ணவனை விண்ணவர்க்கு மேலா