பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 இ. ஒளவை சு. துரைசாமி

நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனவே”

என்று உரைத்து, கனவிடைப் போந்த இறைவன் தமது நெஞ்சின் கண்ணே நிலை பெற்று விட்டான், மறையவில்லை என்று தெரிவிக்கின்றார். -

இவ்வண்ணம் நனவிலும் கனவிலும் இறை வனைக் கண்டு இன்பம் எய்திய நாவுக்கரசர், பொறிவாயிற் காட்சியைப் போக்கறுத்துச் சிந்தைக் குள் நோக்கும் மானதக் காட்சியில் சிவனைக் காண்கின்றார். அந்நிலையிற் கண்டதனை,

பொன்னொத்த மேனிமேற்பொடியும் கண்டேன்

புலித்தோல் உடைகண்டேன் புணரத்தன்மேல் மின்னொத்த நுண்ணிடையாள் பாகம்கண்டேன்

மிளிர்வ தொருபாம்பும் அரைமேற்கண்டேன் அன்னந்தேர் ஊர்ந்த அரக்கன் தன்னை

அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன் சின்னமலர்க் கொன்றைக் கண்ணி கண்டேன்

சிவனை நான்சிந்தையுட் கண்டவாறே

என்று உரைக்கின்றார்.

சிவபெருமான் சிந்தைக்குள் தோன்றுவது எங்ஙனம்? சிந்திப்பவர் சிந்தையும் அதன்கண் பிறக்கும் தெளிவும் அவன் திருவருளால் அமைவன வாய் அவனேயாதலால் அவன் அங்கே தோன்று வதில் ஐயமில்லை. இக்கருத்தைத் திருவாப்பாடி நேரிசையில், “சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுள்