பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ச் சொல் விளக்கம்

5


தமிழ்ச் சொல் விளக்கம்


1. ரகர றகர வேறுபாடு



சொல்லில், றகர மெய்யும் ரகர மெய்யும் எவ்வாறு வரும், எவ்வாறு வராது என்று அறிதற்குக் கீழ்வரும் குறிப்புக்கள் உதவியாகும்.

1. றகர மெய் தன் வருக்கத்தோடு (றகர வரியோடு) சேர்ந்து வரும்;

ரகரமெய் தன் வருக்கத்தோடு (ரகர வரியோடு) சேர்ந்து வாராது.

(உதாரணம்) குற்றம், விற்றான், நெற்றி, புற்று.

2. றகரம், னகரமெய்க்குப்பின் வரும்; ரகரம், னகரமெய்க்குப்பின் வாராது.

(உதாரணம்) குன்றம், தின்றான், பன்றி, கன்று, கொன்றை, சான்றோர்.

3. றகரமேனும் ரகரமேனும் தமிழ்ச்சொற்களில் முதலெழுத்தாக வருவதில்லை. ரகரத்தை முதலெழுத்தாக உடைய சில வடசொற்கள் தமிழில் வந்து வழங்குவது உண்டு.

(உதாரணம்) ரங்கன், ராமன், ரோமம்.