பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

ரகர றகர வேறுபாடு


இவற்றை, அரங்கன், இராமன், உரோமம் என, அ.இ உ என்னும் மூன்று உயிரெழுத்துக்களுள் ஏற்ற ஒன்றை முதலில் கூட்டி, எழுதுதல் வேண்டும்.

4. றகரமெய் ஒரு சொல்லின் ஈற்றுஎழுத்தாக வராது.

ரகர மெய் ஒரு சொல்லின் ஈற்றுஎழுத்தாக வரும்

(உதாரணம்) நீர், தேர், புதர், மலர், ஆசிரியர்.

5. னகரமெய்யை ஈற்றிலுடைய மொழிகளும் லகரமெய்யை ஈற்றிலுடைய மொழிகளும், வல்லெழுத்தை முதலாகவுடைய மொழிகளோடு சேரும்போது, ஈற்று னகர லகர மெய்கள் றகர மெய்யாக மாறும், ரகரமெய்யாக மாறமாட்டா.

6. றகரமெய்க்குப்பின், க, ச, ப, ற என்னும் இந்நான்கு வருக்க உயிர்மெய்களே வரும் மற்றவை சேர்ந்து வரமாட்டா.

(உதாரணம்) நிற்க முயற்சி வெற்பு உற்றார்

ரகரமெய்க்குப்பின், க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங், என்னும் இப் பத்து வருக்க உயிர்மெய்கள் வரும்; மற்றவை வாரா.

(உதாரணம்) வேர்கடிது, வேர்சிறிது, வேத்தீது, வேர்நீண்டது. வேர்பெரிது, வேர்மாண்டது, வேர்வலிது, வேர்யாது, வேர்ஞான்றது.