பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள் 86 வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள் (வல்லெழுத்துக்கள் ஆறனுள் க,ச,த,ப ஆக நான்குமே மொழிக்கு முதலில் வருவன.) அ + கிளி = அக்கிளி அந்த + காளை = அந்தக்காளை இந்த + பசு = இந்தப்பசு எந்த + தட்டு = எந்தத் தட்டு அது தவிர + தேடினான் = அது தவிரத் தேடினான் அதுபோல + கூறினான் = அதுபோலக் கூறினான் பைய + சென்றான் = பையச் சென்றான் மெல்ல + பேசினான் = மெல்லப் பேசினான் சால + பேசினான் = சாலப் பேசினான் மிக + சொன்னான் = மிகச் சொன்னான் மற்ற + கரடி = மற்றக்கரடி வருவதாக + கூறினான் = வருவதாகக் கூறினான் போவதாக + சொன்னான் = போவதாகச் சொன்னான் பாடென + கொடுத்தான் = பாடெனக் கொடுத்தான் தேடென + சொன்னான் = தேடெனச் சொன்னான் அவனைவிட பெரியவன் = அவன்ைவிடப் பெரியவன் அதைவிட + சிறியது = அதைவிடச் சிறியது காணா + காட்சி = காணாக் காட்சி இல்லா + தாழ்வு = இல்லாத் தாழ்வு பொல்லா + காலம் = பொல்லாக் காலம்