பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லெழுத்துக்கள் மிகா இடங்கள் 93 இன்று + கண்டான் = இன்று கண்டான் என்று + தந்தான் = என்று தந்தான் நன்று + சொன்னாய் = நன்று சொன்னாய் அவ்வளவு + காலம் = அவ்வளவு காலம் இவ்வளவு + துணிவு = இவ்வளவு துணிவு எவ்வளவு + பொறுப்பு = எவ்வளவு பொறுப்பு அதிலிருந்து + பெற்றான் = அதிலிருந்து பெற்றான் இதினின்று + செய்தான் - இதினின்று செய்தான் அவனொடு + போனான் = அவனொடு போனான் அவனோடு + சேர்ந்தான் = அவனோடு சேர்ந்தான் பண்ணோடு + பாடினான் = பண்ணோடு பாடினான் நாடு + சென்றான் = நாடு சென்றான் கிணறு + மூழ்கினான் = கிணறு மூழ்கினான் யானை + பெரிது = யானை பெரிது அத்தனை + செடி = அத்தனை செடி இத்தனை + சிறுமை = இத்தனை சிறுமை எத்தனை + பசு = எத்தனை பசு பிள்ளை + தேடினது = பிள்ளை தேடினது அவை + பெரியண் = அவை பெரியன பறவை + கொன்றான் = பறவை கொன்றான் ஒளவை + கண் = ஒளவை கண் அதுவோ + போனது = அதுவோ போனது மண் + பெரிது - மண்பெரிது கண் + சிறிது = கண் சிறிது எவர் + பெரியவர் = எவர் பெரியவர் குளிர் + காலம் - குளிர் காலம் பயிர் + செய்தான் = பயிர் செய்தான் நீர் + பாய்ச்சினான் = நீர் பாய்ச்சினான் நீர் + குடித்தான் = நீர் குடித்தான்