பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 தமிழில்...வளர்ச்சியும் யாடல் இருத்தல் கூடும்; சிலருடைய சிறுகதையில் எல்லாம் உரையாடலாகவே அமைந்துவிடுதலும் உண்டு. முதற் பத்தியில் வரும் வாக்கியங்களைச் சிறந்த எழுத்தாளர்கள் தேர்ந்து அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றார்கள். முதற் பத்தியைப் படித்தவுடன் நோக்கம் இன்னது என்பது புலப்பட வேண்டும் என்பார் ஹட்சன். (Initial sentences should bring out the aim.”) சிறுகதையில் வரும் வர்ணனைகள் சிறிய அளவினவாக இருத்தல்வேண்டும். அவ்வருணனைகள் இன்ன ஊர், இன்ன இடம், இந்த ஆள் என்பதைப் புலப்படுத்தும் அளவிற்கு ஏற்றதாக இருப்பது போதுமானது.

முடிவு

   சிறுகதையில் முடிவு இன்பமாக இருத்தல்வேண்டும் என்று சிலரும், துன்பமாகவே இருத்தல்வேண்டும் என்று சிலரும் நினைக்கிறார்கள். துன்ப முடிவினாலேயே ஒரு கதை கலையழகுடையதாகிவிடும் என்ற தப்பான கருத்து சிலரிடத்திற் பரவிவருகிறது. துன்பியல் முடிவினால்தானோ இன்பியல் முடிவினால்தானோ கலை அழகு பெற்றுவிடாது; கலையழகிற்கு ஏனைய பல காரணங்கள் உண்டு என்பதை மதித்தல் வேண்டும் என்பார் பெயின். (“Happiness and unhappiness have nothing to do with art; the artistic ending is the right and inevitable ending.")
    நாம் வாழும் இக்காலத்தில் மக்கள் எதனையும் விரைந்து செய்ய விரும்புகின்றனர். அதனால் கதைகளை விரைவிற் படித்து முடித்துவிடவேண்டும் என்ற எண்ணம் பலரிடத்திற் பரவியுள்ளது. அவ்வெண்ண்த்தை நிறைவேற்றும் வகையிற் பற்பல சிறுகதைகள் குவிந்துகொண்டிருக்கின்றன. இக்கதைகளை எழுதுவித்துப் படிப்போரை மகிழ்விக்கும் நோக்கம் உடையனவாகப் பல பத்திரிகைகள் உள. வெளிவரும் சிறுகதைகளிற் பல பொருளற்றனவாகவும், மற்ற நிலையிலுள்ளனவாகவும் சிறுகதை இலக்கணத்திற்குப் பொருந்தாதனவாகவும் இருத்தல் கூடும்; இருக்கின்றன்