பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுகதை இலக்கியம்
6

எல்லா மொழிகளுக்கும் இது ஒத்ததே. சிறுகதை இலக்கணத்தோடு ஒத்து அமைந்த சிறுகதைகள் ஆங்கிலத்திற் பத்து அல்லது பதினைந்துதான் உண்டு என்பது உண்மையானால் தமிழ் மொழியிலும் பிற இந்திய மொழிகளிலும் இலக்கணத்தோடு பொருந்திய சிறுகதைகள் இவ்வளவு என எளிதிற் கணக்கிட்டுவிட முடியும் அன்றோ எவ்வாறாயினும், தமிழ்ச் “சிறுகதை' இலக்கியம் எழுதுவோரின் திறத்தாலும் படிப்போரின் ஆதரவாலும் பெருகுவதற்கும் வளருவதற்கும் வாய்ப்பு உடையது என்பது மாத்திரம் உண்மை.