பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறுகதைகள் 13

காணக்கூடியனவே. அவர்மிக்ககற்பனைஆற்றல் உடையவர். நெஞ்சினை உருக்கித் தைக்கும் வகையில் எழுதக்கூடிய அவர் போலப் பலரில்லை. அவர் மிக்க சுருக்கமாகவும், திட்பமாகவும் எழுதுதலில் வல்லவர்; வரிதோறும் தொனிப் பொருளோடு வரையும் பெற்றி படைத்தவர்.

     கு. ப. இராசகோபாலன் உயிரோடு திகழ்வாரைப் போலப் பல பாத்திரங்களைத் தமது கதைகளிற் படைத்துக் கொடுத்துள்ளார். சாதாரணமாக நம்மால் ஒதுக்கி விடப்படுகிற, நம் கண்ணுக்குத் தெரியாது போய்விடக்கூடிய வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு அவர் கதைகளை எழுப்பியுள்ளார். அவர் சொல்லாட்சி ஒரு தனிமதிப்புடையது. சில சொற்களில் அடங்கிக் கிடக்கும் பொருள் விரித்தால் அகன்று காட்டும். "காணாமலே காதல்" "புனர் ஜென்மம்" “கனகாம்பரம்" முதலிய அவருடைய சிறுகதைத் தொகுதிகளால் அன்றியும், "இரட்டை மனிதன்" போன்ற மொழிபெயர்ப்பு நாவல்களாலும் அவர்புகழ்நிலவும் என்பது உறுதி. 
     இக்காலத்தில் தமிழ்ச் சிறுகதை ஆசியர்களின் எண்ணிக்கைப் பெரிது. எதற்கும் அவசரப்படுகின்ற இக்காலத்தில் நீண்ட நாவல்களைப் படிப்பதை விடச் சிறுகதையைப் படித்து முடித்துவிடுவதற்கு விழைவோர் பலர். அதனால், பத்திரிகை யுலகம் சிறுகதைக் கலையை வளர்த்து வரக் காண்கிறோம். பஞ்சாமிர்தம், லட்சுமி, ஆனந்த போதினி, ஆனந்த விகடன், பிரசண்ட விகடன், கல்கி, மணிக்கொடி, பொன்னி, கலைமகள், வசந்தம், அமுதசுரபி, சக்தி, சிந்தனை, மஞ்சரி, கலைக்கதிர், குமுதம், காதல்,அஜந்தா, சுதேசமித்திரன் வாரப்பதிப்பு, தினமணிகதிர், வீரகேசரி, ஈழகேசரி, தினகரன் முதலிய பத்திரிகைகளில் அடிக்கடி சிறுகதைகள் வெளிவரக் காண்கிறோம்.
     அவற்றில் எழுதும் ஆசிரியர் அனைவரைப்பற்றியுமோ, வெளிவரும் கதைகள் எல்லாவற்றையுமோ இப்போது கூறு