பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 தமிழில்...வளர்ச்சியும்


தல் என்பது இயலாது. பொறுக்கி யெடுத்த சிலரைப்பற்றித்தான் ஆய இயலும்.


    அறிஞர். சர். எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களுடைய கருத்தினைப்போல, இலக்கியம் நம்மை மகிழ்விக்கச்செய்து, அறிவுரையும் ஈனுவதோடு நின்றுவிடாமல், நம் ஆத்ம சச்தியை எழுப்பவேண்டும். சிறுகதையும் இலக்கியத்தின் வகைகளில் ஒன்றாதலின், இப்பண்பினைச் சிறுகதைகளிலும் எதிர்பார்ப்பது குறையாக மாட்டாது. அக்கருத்தோடு நோக்கினால், சுப்பிரமணிய பாரதி இயற்றிய "சிதம்பரம்” என்ற கதையில் கடவுள் ஒருவரே என்ற கொள்கை குறிப்பாக நலைநாட்டப்படுவதைக் காணலாம். சி.இராஜகோபாலாச்சாரியார் எழுதிய "கூனி சுந்தரி" என்ற கதையில் "உன்னைப் பார்த்தால் என் உடம்பு தெரியவில்லை. உடம்பைப் பார்த்தால் நீ தெரியவில்லை" என்ற தத்துவக் கருத்து விளங்குகிறது. கு.ப.ரா எழுதிய "தமிழ் மங்கை” நாரணதுரைக் கண்ணன் (ஜீவா) எழுதிய "வேதாந்தகேசரி", சிதம்பர சுப்பிரமணியம் எழுதிய "இரட்டைத் தாமரை” மகுதூம் எழுதிய "அமர ஒவியம்" ஆகிய கதைகள் இக்கூறுபாட்டில் அமையும்.
     சிறுகதையின் இலக்கணம் வகுத்த பெயின் என்பார் கூறுவதைப் போல், சிறுகதைகள் அகண்ட பெரிய உண்மைகளைப் போதிக்க வேண்டியதில்லை. தற்பொழுது மகிழ்ச்சியையூட்டிக் குறிப்பு வகையான எதாவது ஒரு கருத்தினைப் புலப்படுத்தினாற்போதும். அதனால்தான் பல ஆசிரியர்கள் ஒரே மூச்சிற் படித்து விடக் கூடிய பல சிறுகதைகள் எழுதுகின்றார்கள்.
     சில கதைகளில, சொல் வேறு செயல் வேறாக உள்ள மாந்தர்களைப் பற்றிக் கூறப்படுகின்றன. "தனி யொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” “பாரத சமுதாயம் வாழ்கவாழ்க" என மேடைப் பிரசங்கங்கள் நடைபெறுகின்ற அதேநேரத்தில் ஒரு மனிதன் ஒருகை